FREELANCER
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆலடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 2024.09.15- ஞாயிற்றுக்கிழமை காலை 8.49 - 10.01-வரை சுபவேளையில் கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு இடம் பெறவுள்ளது .
ஆலயத்தின் கிரிகைகள் யாவும் 2024.09.12-அன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது .
இன்றைய தினம் (2024.09.14)சனிக்கிழமை அடியார்களின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 7.00. மணி முதல் மாலை 5.00. மணிவரை இடம் பெற உள்ளது .
அதனைத்தொடர்ந்து 12- நாட்கள் மண்டலாபிஷேகம் இடம் பெற்று .27.09.2024-அன்று வெள்ளிக்கிழமை பகல் பால் கூட பவனி இடம் பெறுவதோடு 1008-சங்காபிஷேகம் நடை பெற உள்ளது
பக்த அடியார்கள் அனைவரையும் கும்பிபாஷேக நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீசித்தி விநாயகரின் அருளைபெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்