மட்டக்களப்பு மீன்மகள் சினிமா நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு (2024.09.18) பூஜை நிகழ்வுடன் ஆரம்பமானது .

 

 


 














  2024.09.18  இன்றைய தினம்  மீன்மகள் சினிமா நிறுவனத்தின்   இரண்டாவது தயாரிப்பில்  உருவாக இருக்கும்  திரைப்படம்  பூஜை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது ,அதனை தொடர்ந்து  படப்பிடிப்புக்கு முன்னர் இடம்பெறும் கிளாப் கட்டை அடிக்கும்  நிகழ்வும்  மட்டக்களப்பு   தாண்டவன்வெளி புனித காணிக்கை  மாதா ஆலயத்தின்  இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை சொலமன் சொலமன் அவர்களால்   நடாத்தப்பட்டது
கதையை    புலோரன்ஸ்  பாரதி கென்னடி அவர்களும்
திரைக்கதை வசனத்தை  சரோனித் பிறேம்குமார் எழுதி இருந்தார்கள்.
  சதுர்வணன்  தயாரிப்பு மேற்பார்வையாளராக  பணி புரிகிறார் .
அனா கத்லின் கெனடி அவர்களின்   மீன்மகள். நிறுவனத்தின்   தயாரிப்பில்   இத்   திரைப்படம் வெளிவரவுள்ளது .
A.J  சங்கர்ஜன் இசையமைப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை
    கோடீஸ்வரன் அவர்கள் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது
பூஜை நிகழ்வில் நடிகர்  நடிகைகளும்  , பங்கு பற்றும் கலைஞர்களும் மற்றும் கதா பாத்திரங்களில் தோன்ற இருக்கும் சிறுவர்களும் கலந்து  கொண்டு சிறப்பித்தார்கள் .