மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்.2024
































    மட்டக்களப்பு  தான்தோன்றீர்வரர் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ ஞாயிற்றுக்கிழமை(22.09.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் எனவும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் பெருமையினைப் பெற்று விழங்கும்,; மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் திருவிழா கடந்த 04 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது

 இதேவேளை கொடிக்கம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து

பிள்ளையார் மற்றும் சித்திரத்தேர் ஆகியவற்றுக்குப் பூஜைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து இரண்டு தேர்களும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துவரப்பட்டு தேரோட்ட உத்தசவம் நடைபெற்றது.