மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் மாபெரும் இரத்ததான முகாம் -2024

 

 




 





 




















FREELANCER



 மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கத்தினரால் மாபெரும் இரத்ததான முகாம் 28.09.2024. திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை  நடராஜானந்தா மண்டபத்தில் இடம்பெற்றது .
“உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற  இரத்ததான முகாமிற்கு பழைய  மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் ,
பிரதேச வாழ் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆர்வத்துடன் இரத்த கொடை வழங்க முன் வந்துதிருந்தனர் .
இரத்ததான முகாமிக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம்  வாசுதேவன் பிரதான அதிதியாக கலந்து கொண்டதோடு ,இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர்கள் மற்றும் தாதிகள் குழாம் இரத்த சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் .