எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.

 


எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (23) வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.