வரதன்
"ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகலருக்கும் வெற்றி ஐக்கியமான நாடு" தலைப்பின் கீழ் இடம் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தி ற்கான ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பிரதான கூட்டம்-, இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகலினால் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் கடந்த காலங்களில் நேர்மை யற்ற ஊழலுடன் கூடிய மக்களுக்கு விரோதமான இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புகின்ற நாளாக 21 தேதி காணப்படும் - கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோமசுந்தரம் கணேச மூர்த்தி தெரிவித்தார்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகலருக்கும் வெற்றி ஐக்கியமான நாடு தலைப்பின் கீழ் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரச்சார பிரதான கூட்டம் கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோமசுந்தரம் கணேச மூர்த்தி தலைமையில் இடம் பெற்றது இந்தப் பிரச்சார கூட்டத்திற்கு மாவட்டத்திலிருந்து பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டதுடன் தங்களது ஆதரவினையும் சஜித் பிரேமதாசாவுக்கு கரகோஷம் எழுப்பி தெரிவித்தனர்
இடம் பெற்ற இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆன ராவ் ஹக்கீம்- ரிஷாட் பதுதீன் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் கட்சி யின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர் இங்கு உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி
இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகலினால் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் கடந்த காலங்களில் நேர்மை யற்ற ஊழலுடன் கூடிய மக்களுக்கு விரோதமான இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புகின்ற நாளாக 21 தேதி காணப்படும் எனவும் அதற்காக எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆதரிக்க வேண்டுமென நேற்று மாலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்