ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் அநுர குமார திசாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அநுர குமார திசாநாயக்க  ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.