புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும்

 


2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன், நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

அதன்படி இன்றுடன் நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வினாத்தாள்கள் குறித்து மீண்டும் கேட்டு பிள்ளைகளை ஒடுக்க வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இன்றைய பரீட்சையின் போது பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதுபற்றி எழுத்து மூலம் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும், இதுவரையில் அவ்வாறான முறைகேடு தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.