5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார்.
இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களாக கீதா குமாரசிங்க, ஷசீந்திர ராஜபக்ஷ , அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சர் பதவிகள் பின்வருமாறு...
கீதா சமன்மலி குமாரசிங்க - பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம்
ஷசீந்திர ராஜபக்ஷ - நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல்
தெனுக விதானகமகே - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
பிரசன்ன ரணவீர - சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி
டி.வி. சானக - மின்சாரம் மற்றும் எரிசக்தி
கீதா குமாரசிங்க நேற்று (09) கண்டியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவருடன் இணைந்துகொண்டார்.
இதேவேளை, ஷசீந்திர ராஜபக்ஷ, தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.