ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை .

 


ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றனர்.

அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கவுள்ளனர்.