ஒருகாலத்தில் மாரடைப்பு வயது மூத்தவர்களுக்கே வந்தது. எனினும், வயது வித்தியாசம் இன்றி, தற்போது மாரடைப்பு வருகிறது. இதற்கு தவறான உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், லக்னோவில் உள்ள மான்ட்ஃபோர்ட் பாடசாலையில் 3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிங் என்ற 9 வயதுடைய மாணவி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளதுடன் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதித்த போது மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயம் பொலிஸாரின் கவனத்திற்கு சென்றும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றமைத குறிப்பிடத்தக்கது.