ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.
இதன்போது, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.