மட்டக்களப்பு மாவட்டவாக்காளர்கள் தமது ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவதற்காக காலை ஏழு மணி முதல் ஆர்வத்துடன் வருகை தருவதை அவதானிக்க முடிகின்றது.

 


 





 வரதன்

 

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் இன்று நாடலாவிய ரீதியில் காலை எழு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை இடம் பெற்றவுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் 442 வாக்களிப்பு நிலையங்களில் 449 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்காளர்கள் தமது ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவதற்காக காலை ஏழு மணி முதல் ஆர்வத்துடன் வருகை தருவதை  அவதானிக்க முடிகின்றது.

சுமுகமான முறையில் இடம் பெற்று வரும் இத்தேர்தல்கள் கடமைகளில் ஆயதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.