பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் .

 


யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே உயிரிந்துள்ளார்.

கொக்குவில், ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவி மீது டிப்பர் மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.