மட்டக்களப்பு மாவட்டத்தில் பாற் பண்ணையாளர்களின் பிரதான மயிலத்தமடு மேட்ச்சத் தரை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

 

வரதன் 

 

மட்டக்களப்பு மாவட்ட மேட்ச்சத் தரை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவி னால் நிறுத்தி வைக்கப்பட்ட எனது வீட்டுத் திட்டங்களுக்கான நிதி உதவிகளை இப்போதைய ஜனாதிபதி யினாலும் வழங்கி வைக்கப்படவில்லை தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்பு வறிய மக்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்கள் நிறைவு படுத்தி கொடுக்கப் படும் - சஜித் பிரேமதாச
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாற்  பண்ணையாளர்களின் பிரதான மயிலத்தமடு மேட்ச்சத் தரை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட உள்ளத்துடன் வறிய மக்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்கள் நிறைவு படுத்தி கொடுக்கப் படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவினால் நிறுத்தி வைக்க ப்பட்ட எனது வீட்டுத் திட்டங்களுக்கான நிதி உதவிகளை இப்போதைய ஜனாதிபதி யினாலும் வழங்கி வைக்கப்படவில்லை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்பு இடை நடுவில் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து வீட்டு திட்டங்களின் வேலைகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன்


நாட்டில் வீடு வசதியற்ற அனைவருக்கும் எனது கமுதாவ வீட்டு திட்டத்தின் கீழ் சகலருக்கும் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என நான் உறுதியளிக் கின்றேன் மற்றும் மாவட்டத்தில் உள்ள சகல விவசாய நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதுடன் காட்டு யானை தாக்கத்திற்கான நிரந்தர தீர்வு காணப்பட உள்ளதுடன்


மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எனது ஸ்மார்ட் வகுப்பறை கல்வித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது இங்குள்ள வைத்தியசாலைகளின் தரங்கள் நவீன மயப்படுத்தப்பட உள்ளதுடன் வெள்ளாவளி  பிரதேச செயலகத்தில் மக்களுக்கு தேவையான வைத்திய வசதிகளை மேம்படுத்த புதிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட உள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரம் குறைந்த விலையில் வழங்கப்பட உள்ள உடன்


மாவட்டத்தில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் மாணவர்களுக்கான கணனி அறிவு தொழில்நுட்ப கல்வி வழங்க உள்ளத்துடன் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வேலை யற்ற இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க உள்ளேன் இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களிலும் விசேட ஜனாதிபதி செயலக அபிவிருத்தி திட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளதுடன்   கிராம மட்டங்களில் உள்ள மக்களுக்கான வாழ்வாரத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளது என


நேற்று மாலை ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டம்  மட்டக்களப்பு  சிவானந்தா மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற போது  சஜித் பிரேமதாச இவ்வாறு  கருத்து தெரிவித்தார்