பிரமுகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளது.

 


 

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.