புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் - மத குருமார்கள்

 


  வரதன்

 

 

 நாம் ஒருவரை நினைத்து இருக்கின்ற  போது அல்லா வேறொரு தலைவனை தந்திருக்கின்றான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கின்றது புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் -  மத குருமார்கள் புதிய ஜனாதிபதிக்கு நல்லாசி

ஒற்றுமையினை முஸ்லிம் மதம் அதனை வலியுறுத்தியுள்ளது ஒற்றுமை என்னும் கயிற்றை  பற்றி பிடியுங்கள் ஒற்றுமையின் மூலம் அன்பாக பண்பாக பாசத்தின் மூலம் பரஸ்பரமாக இருக்க வேண்டும் அதன் மூலம் கட்சி பேதம் பார்க்காமல் அல்லாஹ் ஒரு மாற்றத்தை தருகிறான்  என்று சொன்னால் அவனின் நாட்டம் இல்லாமல் இந்த உலகத்திலே எதுவும் நடக்காது என்பது குர்ஆன் வலியுறுத்தி நிற்கின்றது எந்த விடயமென்றாலும் இறைவனின் நாட்டத்தின் உடைய தான் அத்தனை விடயங்களும் நடக்கின்றது நாம் ஒருவரை நினைத்து இருக்கின்ற  போது அல்லா வேறொரு தலைவனை தந்திருக்கின்றான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கின்றது


இலங்கை திருநாட்டில் நாம் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கின் றோம் . புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற  அவர்கள் இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும் சமத்துவமான சேவையினை வழங்க வேண்டும் புதிய ஜனாதிபதியின் வருகை நாளே இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களும் எல்லாவிதமான சிறப்புகளையும் பெற வேண்டும்
இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு சேவையிலும் இறைவனின் திருவருளோடு சிறப்பாக நடைபெற வேண்டும்


புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் அவரோடு இணைந்து பணிகளை முன்னெடுக்கின்றவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நல்லாசிகளை தர வேண்டுமென மட்டக்களப்பில் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்களின் போது கலந்து கொண்ட மத குருமார்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்