( வி.ரி.சகாதேவராஜா)
இன்று ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கான இறையாசி மற்றும் எழுதுகருவி வழங்குகின்ற நிகழ்வு வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கடந்த (13) வெள்ளிக்கிழமை ஆலய சன்னிதானத்தில் நடைபெற்றது .
ஆலய பிரதம குருக்கள் சிவசிறி மு.கு.சச்சிதானந்த குருக்கள் முன்னிலையில் ஆலய தலைவர் இ. மேகராசா (அதிபர் )தலைமையில் நிகழ்வு இடம் பெற்றது.
மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்வி காரியாலயம் இளைஞர் சேவை மன்ற பிரதேச சம்மேளனம் எழுத்தாணி இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான பென் பென்சில் போன்ற எழுதுகருவிகள் குருக்களால் வழங்கப்பட்டது.
இக் கருவிகள் ஆலயத்தில்பூஜையில் வைக்கப்பட்டு இங்கு இறையாசி வழங்கி வைக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 19 பாடசாலைகளில் 409 மாணவர்களுக்கு இந்த எழுது கருவிகள் இங்கு வழங்கப்பட்டது .
நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாபதி விவேகானந்தம், கோட்டக் கல்வி பணிப்பாளர் மூ. உதயகுமாரன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.தயாசீலன் சம்மாந்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னாள் அதிபர் தவிசாளர் சிவ.அகிலேஸ்வரன் அதிபர் வ.சுந்தரநாதன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
நிறைவில் முதலைக்கு டா மகாவித்தியாலயத்தின ரின் முதலாவது அன்னதான நிகழ்வு அதிபர் வ.சுந்தரநாதன் தலைமையில் பிரதி அதிபர் எஸ்.கிருபாகரன் வழிகாட்டலில் நடைபெற்றது.