நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுமா ?

 


நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதி திசாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இலாகாக்களை வைத்திருப்பார், அதே நேரத்தில் பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அவர் நிர்ணயிப்பார் என்றும் NPP தகவல்கள் தெரிவித்தன.