எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி பெற்றதன் பின்பு பாராளுமன்றத்தில் புதிய மந்திரி சபை அமைப்பார் -சோ கணேசமூர்த்தி

 

 

 

 வரதன் 

 

 

 

 

 

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அனுரகுமார திசாநாயக்கா வினால் புதிய அமைச்சரை ஒன்று அமைக்க முடியாது அவர் ஜனாதிபதியாக வந்தால் தானே அமைச்சரவை அமைக்க முடியும் ஆனால் -ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சர்  சோ கணேசமூர்த்தி தெரிவித்தார்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப் பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசா நாயக்க நிச்சயம் வெற்றி பெற மாட்டார் எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி பெற்றதன் பின்பு பாராளுமன்றத்தில் புதி
ய மந்திரி சபை ஒன்றை எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்டே அமைப்பார்


தற்போதுள்ள மந்திரி சபைகள் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் அதன் பின்பு பாராளுமன்றத்தில் மக்களின் ஆணை பெறப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அனுரகுமார திசாநாயக்காவினால் புதிய அமைச்சரை ஒன்று அமைக்க முடியாது அவர் ஜனாதிபதியாக வந்தால் தானே அமைச்சரவை அமைக்க முடியும் ஆனால்

எங்களது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்போம் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை,  நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிய கள்வர்களுடன்  ஒருபோதும் சஜித் பிரேமதாசா இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க மாட்டார் தேசிய அரசாங்கத்துக்கு இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சர் - சோ கணேசமூர்த்தி மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போது என   இவ்வாறு கருத்து தெரிவித்தார்.