முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிரடி அறிவிப்பு .

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தேசிய கட்சியின் பிரதித் தலைவர் 
ருவான் விஜேவர்தனதெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.