கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம் இடம்பெற்றது.

 

 
































FREELANCER



 கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை  (2024.09.01)  பல நூற்றுக்கணக்கானோர் புடைசூழ இடம்பெற்றது.

மேளவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் ஒலிக்க முருகப் பெருமான் அழகிய வடத்திலேறி அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைக் கண்ணாரக் காண மட்டக்களப்பு  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.

தேரோட்ட நிகழ்வின் பொது காலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன

இன்றைய தினம்  திங்கள் கிழமை (02.09.2024) கல்லடி சமுத்திரத்தில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளது.