வரதன்
அநுர குமார திஸாநாயக ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்து கொண்ட மையை அடுத்து மட்டக்களப்பில், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது. நடை பெற்று முடிந்த முடிந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து முடிந்த அடுத்து அதனை கொண்டாடும் வகையில் கிழக்கு மாகாணத்தில் கட்சி ஆதரவாளர்களினாலும் பொதுமக்களினாலும் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மிகவும் அமைதியான முறையில் எளிமையான கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து முக்கியமான இடங்களில் வாழ்த்து தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு நகரில் தொகுதியின் பிரதான அமைப்பாளர் எஸ் திலகநாதன் தலைமையில் இடம் பெற்றது
இடம்பெற்ற நிகழ்வு போது புதிய ஜனாதிபதியின் புகைப்படம் காட்சிப்படுத்த ப்பட்டிருந்ததுடன் பிரதான வீதிகளுடாக சென்ற பொது மக்களுக்கு குளிர் பானங்களும் இனிப்பு வகைகளும் இனிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் வழங்கி வைக்கப்பட்டது இன்றைய இந்த நிகழ்வுக்கு மதத் தலைவர்கள் கட்சியின் தேச அமைப்பாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதற்கமைவாக தேசிய மக்கள் சக்தியின் கிளை ஏற்பாட்டில் பிரதான வீதி சதுக்கத்தில் டிஜிட்டல் திரை மூலமாக ஜனாதிபதியின் பதவிப்பிரமான நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் பொது மக்களுக்கு குளிர்பானமும் வழங்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.