வரதன்
தமிழரசு கட்சி இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் விடுதலை ப்புலிகள் காலத்திலும் இவ்வாறான மகா தவறு இடம்பெறவில்லை தமிழரசு கட்சி உருவாக்கிய நோக்கம் தற்போது மாறுபட்டு கட்சியில் உள்ள சிறு பிரிவினர் சுயாதீன ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி உள்ளனர் இது அரசியலில் ஒரு அபத்தான விடயமாக மாறிவிடும் என ஆபத்து உள்ளது - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராவ் ஹக்கீம்
எமது கட்சியானது தமிழரசு கட்சியுடன் என்றும் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையிலே அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில் தேசிய மட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு நாங்கள் ஒற்றுமை யுடன் பயணித்து செயற்பட்டு வருகின்றோம் நாம் ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் எடுக்கின்ற முடிவோடு தமிழரசு கட்சி தமிழரசு கட்சி இணைந்து வரும் தமிழரசு கட்சியில் உள்ள சிறு பிரிவினர் தாங்களும் இம்முறை சுயாதீன ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி உள்ளனர் இது அரசியலில் ஒரு அபத்தான விடயமாக மாறிவிடும் என ஆபத்து உள்ளது
தமிழர்களது விடயங்களை அபிலாசைகளை தேசிய சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்கின்ற வேளையில் கிடைத்த மக்கள் ஆணையில் அடிப்படையில் எடை போடுகின்ற போது இவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வைத்த கோரிக்கை களை அடிப்படையிலேயே கிடைக்கின்ற வாக்குகள் அபிலாசைகளை குழி தோண்டி புதைக்கின்ற விடயமாக மாறிவிடும் இதனை ஒரு சாணக்கிய மான விடயமாக அணுகி இருக்க வேண்டும் இதற்கு முதலும் இருந்த தலைவர்கள் விடுதலைப்புலிகள் காலத்திலும் இவ்வாறான மகா தவறு இடம்பெறவில்லை
தமிழரசு கட்சி உருவாக்கிய நோக்கம் தற்போது மாறுபட்டுள்ளது தமிழரசு கட்சி இந்த முறை உத்தியோகபூர்வமாக முடிவினை அறிவித்துள்ளது இந்த பொது வேட்பாளர் விடயம் சந்தைப்படுத்தல் பலவீனமடைந்தால் உங்களது அபிலாசை களும் பாதிப்படைந்து விடும் இதனை மிக தெளிவாக அடையாளம் காண வேண்டுமென
நேற்று மாலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராவ் ஹக்கீம் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்