மட்டு.மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமாக இந்துக்கல்லூரி-

 

வரதன்

 

 

 மட்டு.மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமாக இந்துக்கல்லூரி-மட்டக்களப்பில் 29 தேர்தல் சட்டவிரோத மீறல்கள் இதுவரை வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை   என மாவட்ட அரசாங்க அதிபர் தகவல் .

எதிர்வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் பதிவு செய்யப்படவில்லை.
 இதுவரை மாவட்டத்தில் 29 தேர்தல் சட்டவிரோத மீறல்ஒகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தார்கள் திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்

மாவட்டத்தில் இதுவரை எவ்விதமான தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நான் மாவட்ட செயலகமும் தேர்தல் திணைக்களமும் செய்து வருகின்றது

மாவட்டத்தில் 4,49686  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.442 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கல்குடா மட்டக்களப்பு பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்போம் நடைபாதைகள் நடைபெறவிருக்கின்றன வாக்கு என்னும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்