இத்தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் ஜனநாயக ரீதியாக நாம் வெற்றி பெற்றுள்ளோம்- சோ.கணேசமூர்த்தி.

 


 

 

 "கடந்த ஆட்சியில் இருந்த அரச பலம் மற்றும் அமைச்சுப் பலம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் வழங்கிய ஆணையை இத்தேர்தலில் காணமுடிகிறது. இத்தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் ஜனநாயக ரீதியாக நாம் வெற்றி  பெற்றுள்ளோம். ஜனநாயகம் எங்களுடன் இருக்கிறது. அதனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றிவாகை சூடுவோம். குறிப்பாக இந்தத் தேர்தலில் வாக்களித்த மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இத்தால் எனது நன்றியினைக் கட்சி சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்".

திரு சோ.கணேசமூர்த்தி.
மாவட்டத் தலைவர்.
மட்டக்களப்பு மாவட்டம்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி.