தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போது,  2011ஆம் ஆண்டு புலி சின்னங்களை பயன்படுத்த தடை விதித்தே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதில் இறந்தோரை நினைவேந்தல் நடத்த தடை விதிக்கப்படவில்லை.
கடந்த 13 வருடங்களாக நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். அது தொடர்பில் ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, நாடாளுமன்றமோ எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவ்வாறிருக்க பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோருவது ஏற்புடையதல்ல என்ற மன்று, நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.