தேர்தல் பிரசாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் .

 


தேர்தல் பிரசாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் “சுரகிமு தருவன்” தேசிய இயக்கம்  தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் , தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.