தமிழரசு கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது, தமிழரசு கட்சி தலைவர் அதிரடி அறிவிப்பு .

 


ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தங்கியிருக்கும் சிறீதரன், கட்சியின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த சிறீதரன் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாத நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நல்லூர் உற்சவ நாளில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.