ஜனாதிபதி தேர்தல் வாக்காளர்களுக்கான வாக்கு அட்டைகள் வினியோகிக்கும் நடவடிக்கை அஞ்சல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

 

வரதன்

 

 

 

 

ஜனாதிபதி  தேர்தல் வாக்காளர்களுக்கான வாக்கு அட்டைகள் வினியோகிக்கும் நடவடிக்கை அஞ்சல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது
ஜனாதிபதி  தேர்தல் எதிர்வரும் 21 ஆம் தேதி இடம்பெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத் திற்கு ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கான வாக்கு அட்டைகள் வினியோகிக்கும் நடவடிக்கை அஞ்சல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது


இந்தச் செயற்பாடுகள் எதிர்வரும் 14ஆம் தேதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது  வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத பொதுமக்கள் அவர்கள் நேரடியாக  மாவட்ட அஞ்சல் திணைக்களங்களுக்குச் சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும் அல்லது மாவட்டத்தின் பிரதான தேர்தல் திணைக்களத்துக்குச் சென்று அவர்களது அடையாளங்களை நிரூபித்து பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட  தேர்தல் அலுவலகத்தின் பிரதி ஆணையாளர் எஸ் சுபியான் தெரிவித்துள்ளார்


இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான பகுதியி களில் உள்ள மக்களுக்கான வாக்காளர் அட்டை நேற்று வழங்கப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் 4 லட்சத்தி 49 ஆயிரத்தி 606  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்