ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 


ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

இந்த வெற்றிகாக எமக்கு முன்னரும், எம்முடனும் பல்வேறு தியாகங்களை செய்தும் சில சந்தர்ப்பங்களில் உயிர்தியாகம் செய்தும் செயற்பட்ட பல பரம்பரையை சேர்ந்தவர்களை பெண்களை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன். இந்த வெற்றியும், இதனூடாக கட்டியெழுப்பப்படும் வளர்ச்சியடைந்த நாடும் அவர்களுக்காக செலுத்தும் கௌரவம் என நான் பார்க்கிறேன்.எதிர்ப்பார்க்கப்படும் அனைத்து மாற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்புவதில் தங்கியுள்ளது. எனவே சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை விரைவில் மீண்டும் ஆரம்பித்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்ல நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்..