அமரர் சின்னத்துரை (லீலா குரூப்) அவர்களின் மகனும் விடைக்கொடிச்செல்வர் திரு. தனபாலா அவர்களின் சகோதரருமான - சமய சமூக சேவகர், பிரபல வர்த்தகர் மதிப்பார்ந்த அருளானந்தன் அவர்களின் இழப்பானது அனைவருக்கும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு கப்பித்தாவத்தை கதிர்காம யாத்திரை சபையின் தலைவராகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவராகவும், கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலய நிர்வாக குழு அங்கத்தவராகவும் சிறந்த வர்த்தக பிரமுகராகவும் விளங்கியவர். குறிப்பாக எமது அம்பாறை மாவட்ட சமய,சமூகப் பணிகளில் முன்னின்று உழைத்தவர் , சிவநெறி அறப்பணி மன்ற ஆண்டு விழா,மற்றும் எமது கல்விப்பணிகளில் இந்து மாமன்றம் சார்பாக கலந்து சிறப்பித்த பேருவையாளர்கிழக்கு மாகணத்தின் பல பகுதிகளில் இருந்து கொழும்பு வரும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு தங்குமிடம் உணவு உட்பட பல்வேறு நற்பணிகளுக்குரியவர்.தமிழ் மக்களுக்கு இயன்றவரை இயன்ற உதவிகளை வழங்கி உள்ளார்.
அருளானந்தன் அவர்களின் இறை பத செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். அமரரது ஆத்மா சிவகதி சேர கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம்.
ஓம் சாந்தி.
27.09.2024.
சைவப்புலவர் யோ.கஜேந்திரா
தலைவர்,
சிவநெறி அறப்பணி மன்றம்.
லோ.சரவணபவன்
செயலாளர்,
சிவநெறி அறப்பணி மன்றம்.
கல்முனை.