மட்டக்களப்பு ஹெரிடேஜ் ரொட்டரி கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் கல்லடி கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது .

 




































FREELANCER

 

 மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கம் மற்றும்   மட்டக்களப்பு ஹெரிடேஜ்  ரொட்டரி கழகம்  இணைந்து பிளாஸ்டிக் பாவனையை தவிர்ப்போம் என்னும் தொனிப் பொருளில்  கல்லடி கடற்கரையில்  பிளாஸ்டிக் குப்பைகளை  அகற்றும்  நிகழ்வொன்று   மட்டக்களப்பு  மாவட்ட பதில் ஆணையாளரும்   தலைமையக  உதவி ஆணையாளருமான  பொ.சசிகுமார்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டது , மற்றும் மட்டக்களப்பு ஹெரிடேஜ் ரொட்டரி கழக தலைவர் கோ.பாமதீசனின்   நெறிப்படுத்தலில்  உதவி மாவட்ட ஆணையாளர்  அ.நிஷாந்தன்  ஒருங்கிணைப்பிலும்  நடைபெற்றது.
இதில் சாரண  மாணவர்களும் ரொட்டரி  கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கடற்கரையில்  பிளாஸ்டிக் குப்பைகளை  அகற்றும் நிகழ்வில் கலந்து கொண்டனர் ..