தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பயந்து பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள் தமது அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மீரிகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எதிரிகள் அவதூறாக சதி கதைகள் சொல்வதைத் தவிர வேறு பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் அரசியல் குழம்பிப் போயிள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு செல்லும் போது அதாவுல்லாவையும், சஜித் பிரேமதாச அம்பாறைக்கு செல்லும் போது ஹக்கீமையும் அழைத்துச் செல்கிறார்.
ஆனால் நாம் தேசிய ஒருமைப்பாடு என்ற செய்தியுடன் சென்றோம், அதுதான் பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு.
அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் சஜித் பிரேமதாசவின் மேடையில் பழைய மத, இனவாதக் கதைகளைத் தவிர வேறு கதைகள் இல்லை.
திஸ்ஸ அத்தநாயக்க, கண்டி சென்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் என்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வந்தால் யானைக் எத்கந்த விகாரையின் ஊர்வலத்தை நிறுத்துவோம் என குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த சரித ஹேரத் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு கூறிய அனைவரையும், நீதிமன்றத்திற்கு கொண்டு வருவோம்” என்றார்.