இந்த நாட்டில் பிரச்சனைகள் வந்தபோது நாடு பற்றி எரிந்த போது அதைக் கண்டு பயந்து ஓடிய தலைவர்கள் மீண்டும் ஒருமுறை வந்தால் இந்த நாடு என்னவாகும் தலைவர்கள் என்றால் சவால்கள் வருகின்றபோது அதனை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அதை இந்த ரணில் விக்ரமின் சிங்கமாக மாத்திரம் தான் செய்தார்.
என கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்
செவ்வாய்கிழமை(17.09.2024) மாலை மட்டக்களப்பு பாலையடிவட்டையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நடபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
…
ஐ எம் எப் மூன்றாவது முறையும் இலங்கைக்கு வர இருக்கிறது அது சம்பந்தமாக அவர்கள் அறிக்கைகளை விட்டு இருக்கிறார்கள் நாங்கள் தற்காலிகமான தீர்வுதான் தேடி இருக்கின்றோம் நாங்கள் கடன் பட்ட நாடு கடனை செலுத்துவதாக கூறி இருக்கின்றோம் இன்னும் நிதியை செலுத்த தொடங்கவில்லை அதற்காகத்தான் நாம் கால எல்லை வகுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள் அவர்களுக்காக அஸ்வசும திட்டத்தின் ஊடாக நிதி உதவி திட்டங்கள் தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உரத்தட்டுப்பாட்டின் விலையை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கு சுற்றுலா துறையை அதிகரித்து நாட்டுக்கு டொலரைக் கொண்டு வரவேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது அப்பகுதியியைச் சேர்ந்த ஆகிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.