வரதன்
புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன்,தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதேநேரம் தமிழர்கள் மீண்டும் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் நிலைமையினை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்றைய தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.