தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப் பட்டது .

 

 




வரதன்

 

 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம் பெற்றன, இதேவேளை இன்று காலை மட்டக்களப்பு தலைமையக போலீஸ் நிலையத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ள பொலிசாருக்கான  தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ள 404 போலீசார் இன்று தமது தபால் மூல வாக்களிப்புகளை மேற்கொண்டு இருந்தனர்.