வரதன்
ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் அரச திணைக்களங்களிலும் அரச ஊழியர்கள் மிக உற்சாக மான முறையில் வாக்களித்து வருவதை காணக் கூடியதாக இருந்தது
ஜனாதிபதி தேர்தலில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு அமைவாக மாவட்ட தேர்தல் திணைக் களத்தினால் தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாளாகிய இன்று சகல அரச திணைக்களங்களிலும் உள்ள தேர்தல் கடமைகளுக்காக பணியாற்ற உள்ள தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்களிப்புகள் இன்று காலை தொடக்கம் சகல அரச திணைக்களங்களிலும் அரச ஊழியர்கள் மிக உற்சாகமான முறையில் வாக்களித்து வருவதை காணக் கூடியதாக இருந்தது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை சகல பிரதேச செயலகங்களிலும் மாவட்டத்திலுள்ள வளையக்கல்வி அலுவலகங்களிலும் சுகாதாரத் திணைக்களங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் இன்று உற்சாகமான முறையில் அரசாங்கத்தினால் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தமது நன்றி கடனை செலுத்து முகமாக தமது வாக்குகளை செலுத்துவதை காணக் கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தபால் மூல வாக்காளர்களாக 13116 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்புக்காக தேர்தல் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.