வரதன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தமிழ்
கிராமங்களை ஒன்றிணைத்து மாபெரும் பிரச்சாரக் கூட்டம்! இராஜாங்க அமைச்சர்
சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக பங்கேற்பு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் பொருட்டு பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களை ஒன்றிணைத்து, பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான ஜகத் சமரவிக்கிரம தலைமையில் மாபெரும் பிரச்சார கூட்டமானது அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு விசேட உரையாற்றியிருந்தார் .
பொலன்னறுவை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மன்னம்பிட்டி, கல்லெல, வில்லான, நாவல்பொகுன, சொருவில், புனாவெவ, கரப்பளை, சவன்பிட்டி, தீவுச்சேனை, முத்துக்கல், குடாவப்பொக்கனை, மதுரங்கல, போவத்த ஆகிய கிராமங்களில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்தே குறித்த பிரச்சார கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள், காணிப் பிரச்சினைகள், அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சனைகள் தங்களது புராதன வழிபாட்டு தளங்களில் காணப்படும் வள பற்றாக்குறைகள், கல்வி கலை கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அக் கிராமங்களில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதன் போது இராஜாங்க அமைச்சரினால் அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும், தமிழர்களுக்கே உரித்தான சமய, கலை, கலாச்சார விழுமியங்களை பின்பற்றியவாறு அக்கிராமங்களில் நிலைத்து வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான முனைப்பான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கூட்டத்தில் திம்புலாகல பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான ராகுலன், திபால் சமரவிக்ரம, வெலிகந்தை பிரதேச சபை முன்னாள் தலைவர் நிமால் அதிகாரி, சோமசுந்தரம் ரதன் சர்மா உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பெரும் திரளான மக்கள் என பலரும் கலந்து கொண்ட