நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின்
காலி மாவட்டத்தின் பண்டார எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35,612 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 19,733 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11.595 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,571 வாக்குகளைப் பெற்றுள்ளார்.