பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் வவுனியத மாவட்டத்தில் (07) சனிக்கிழமை முன்னெடுக்கப்படது.
அதே நேரம் சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்ல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் முதற்கட்டமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தனது முழு ஆதரவினை சங்கு சின்னத்துக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் பரப்புரை நடவடிக்கை இன்று காலை முதல் செட்டிக்குளத்தில் ஆரம்பிக்கப்பட்டு பூவரசம்குளம் ஊடாக நெலும்குளத்தில் பரப்புரை கூட்டம் இடம்பெற்று, தொடர்ந்து குழுமாட்டு சந்தி, வேப்பன்குளம், பட்டானிச்சூடு, வவுனியா நகர் பகுதியை சென்றடைந்து ஏ9 வீதியூடாக பயணித்து ஓமந்தை, புளியங்குளம், கனகராயன் குளம் ஊடாக நெடுங்கேணியை சென்றடைந்து முதலாம் நாள் பரப்புரை நடவடிக்கை முடிவுக்கு வர உள்ளது.
தொடர்ந்து நாளை பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.