முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தீவிரமான, குழப்பமான கடந்த காலங்களுடன் வந்தவர்கள். ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத ஒரே வேட்பாளர் தான் மட்டுமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ‘நானோ அல்லது எனது தந்தையோ ஏதேனும் குற்றவாளியாக இருந்தால், நாங்கள் தேர்தலில் மக்களை எதிர்கொள்ள மாட்டோம்” எனவும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தான் ராஜபக்சவின் புதிய தலைமுறை என்றும், நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டுச் செல்ல நவீன மற்றும் புதிய சிந்தனையை வழங்குவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.