உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பின்னர், மீண்டும் வேட்புமனுக்களை கோருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இன்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.