கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ?

 


அநுர தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தின் 09 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake ) இன்று (25) வழங்கப்படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு புதிய ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பல அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.