தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொலிக்ண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்ற பா.அரியநேத்திரனுக்கு எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரசாரத்திற்காக சென்ற பா.அரியநேத்திரனுக்கு மட்டக்களப்பு மாவட்ட நுளைவாயிலில் வைத்து பொது அமைப்பினரால் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டிருந்ததுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனப்பேரணியாக அழைத்துச்சென்றனர்.
முன்னதாக, திருக்கோணமலை அருள்மிகு வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்திற்கு சென்ற பா.அரியநேத்திரன் ஆலய வழிபாட்டினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.