ரீ.எல்.ஜவ்பர்கான்
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பதவிப் பிரமாணம் செய்த வைபவத்தை யொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .சமய தலைவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு ஏற்பாடு செய்த தாக சாந்தி குளிர்பானம் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட நிறைவேற்று செயற்குழு உறுப்பினர்கள் உட்பட தேசிய மக்கள் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பெரும் வரட்சியினால் மக்கள் அவதிப்படுகின்ற சூழ்நிலையில் வீதியால் பயணிக்கும் பயணிகளுக்கு தேசிய மக்கள் சக்தியினர் குளிர்பானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.