வரதன்
சஜித் பிரேமதாசாவுடன் இன்று கிழக்கில் இணைந்துள்ளவர்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் எமது பொது சின்னமான சங்கு சின்னத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரன் தெரிவித்தார்
தமிழரசு கட்சியினர் சஜித் பிரேமதாசாவின் புகைப்படத்தையும் போட்டு அவரது சின்னத்தையும் குறித்து கீழே வீட்டு சின்னமும் தமிழரசி கட்சியை எனும் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன சஜித் பிரேமதாசா தமிழரசு கட்சி யில் இணைந்துள்ளாரா இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்ட நீங்கள் ப சஜித் பிரேமதாசாவின் கட்சியில் இணைந்து விட்டீர்களா என்பதை நான் உங்களுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் சஜித் பிரேமதாசாவுடன் இன்று கிழக்கில் இணைந்துள்ள அவர்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்
பொதுக் கட்டமைப்பு சார்பில் நான் கேட்டுக்கொள்கின்ற விடயம் இங்கு கலந்து கொண்டவர்கள் இணைந்து எமது ஜனாதிபதி வேட்பாளர் அரிய நேந்திரனுக்கு அதிகமான வாக்குகளை நீங்கள் பெற்றுக் கொள்ள உதவ வேண்டும் உங்களு டைய பொது சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எமது பொது சின்ன மான சங்கு சின்னத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும்
தேர்தல் தினத்தன்று வாக்குச்சீட்டில் எமது எல்லா விருப்பமும் இணைந்ததாக ஒரே புல்லடியை சங்கு சின்னத்திற்கு இடவேண்டும் என விருப்பு வாக்குகளுக்கு அப்பால் எமது தெரிவு ஒன்றுதான் அது சங்கு சின்னமே ஆகும் என நேற்று மாலை மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்