வரதன்
ஜனாதிபதி தேர்தலில் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற நாட்டின் புதிய ஜனாதிபதிற்கு எமது கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மிக முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஆண்டாக அமையப் போகின்றது எமது இருப்பை நிலை நிறுத்த அனைத்து அரசியல் கட்சிகள் அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் தமிழர்கள் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிப்பதற்காக எமது கட்சி இன்று அழைப்பு விடுக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பு. பிரசாந்தன் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்
எமது கட்சியின் செயற்குழு தீர்ப்பு தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் பாராளுமன்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது சம்பந்தமான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் அதிக விருப்பத் துக்குரிய வாக்குகளைப் பெற்ற நாட்டின் புதிய ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திசாநாயக்விற்கு எமது கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு கிழக்கு மாகாணத்தை நேசிக்கும் எமது அன்பான மக்கள் அரசியல் தலைவர்கள் எமது கட்சியின் சார்பில் விடுக்கும் அழைப்பானது
எதிர்வரும் 5 ஆண்டுகள் கிழக்கு மாகாணத்தின் மிக முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஆண்டாக அமையப் போகின்றது இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் எமது இருப்பை நிலை நிறுத்த விரும்புகின்ற அனைத்து அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்கள் அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் தமிழர்கள் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிப்ப தற்காக உமது கட்சி இன்று அழைப்பு விடுக்கின்றது
எமது கட்சித் தலைவரின் பாதையின் கீழ் பயணிக்க சகலருக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பு. பிரசாந்தன் இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்