நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 32,295 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,635 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 9,134 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 702 வாக்குகளைப் பெற்றுள்ளார்.