மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவார்- பிரசாந்தன்

 

 

 

 


நாட்டின் பொருளாதார நிலைமையை படிப்படியாக கட்டி எழுப்பிய ஜனாதிபதி யினை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது  நாட்டைப் பற்றி சிந்தித்து எதிர்கால தலைமுறைக்கு நல்லோர் சூழலை உருவாக்கி கொடுக்க ஜனாதிபதியின் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பு பிரசாந்தன்தெரிவித்துள்ளார்
நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சில அரசியல் கட்சிகள் நாள் விருப்பு வாக்கு முறையில் சில குழப்பங்களை முன்னெடுத்து  வருகின்றனர் இருப்பினும் பொதுமக்கள் ஜனாதிபதியின் சின்னத்திற்கு புள்ளடி இட. தீர்மானித்துள்ளனர்

 
இந்த நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவாக இருந்தபோது  அத்தியாவசிய பொருட்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்றதையும் எரிபொருள்  கிடைக்காமல் நோயாளிகள் வைத்தியசாலைக்கு செல்ல  முடியாமல் மரணமான சோகமான சம்பவங்களும் உண்டு. ஆகையால் இவ்வாறான நிலைமைகளை மாற்றி இந்த நாட்டின் பொருளாதார நிலைமையை படிப்படியாக கட்டி எழுப்பிய ஜனாதிபதி யினை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது


கட்சியின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமோக வெற்றியினை பெறுவார் மூன்று லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை அவர் பெறுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பல பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தனர் ஜனாதிபதி  வெற்றியின் பின்னர் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தி அதிகூடிய அதிகாரங்களை வழங்குவதாக எமக்கு உறுதி அளித்துள்ளார்


அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று இணைந்து இந்த நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு நல்லோர் சூழலை உருவாக்கி கொடுக்க ஜனாதிபதியின் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பு பிரசாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.